மாநிலத்தில் ரூ.4.85 லட்சம் கோடி கடன்... பல்வேறு மக்கள் நல நடவடிக்கை மேற்கொள்ள பணம்..? நிதியமைச்சர் பி.டி.ஆர் பதில் 

மாநிலத்தின் கடன் ரூ.4.85 லட்சம் கோடியாக உள்ள நிலையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள திமுக அரசு பல்வேறு மக்கள் நல நடவடிக்கைகளை உறுதியளித்துள்ளது, அவற்றில் சிலவற்றை ஏற்கனவே செயல்படுத்தவும் தொடங்கியுள்ளது. இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து கிடைக்கும்? பதிலளிக்கும் நிதியமைச்சர் பி.டி.ஆர்

மாநிலத்தில் ரூ.4.85 லட்சம் கோடி கடன்... பல்வேறு மக்கள் நல நடவடிக்கை மேற்கொள்ள பணம்..? நிதியமைச்சர் பி.டி.ஆர் பதில் 

தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31, 2021 வரையிலான அதிகாரபூர்வ கடன் ரூ.4.85 லட்சம் கோடி என்று தெரிவிக்கபடுகிறது, ஆனால் இது திருத்தப்பட்ட மதிப்பீடு. இறுதி கணக்கு அல்ல. பெரிய அளவுகளில் உள்ள மறைக்கப்பட்ட கடன்கள் குறித்து வெள்ளை அறிக்கையில் வெளிவரும்.

 திமுக வந்த பின்னர், சீர்கேடுகளில் ஈடுபடவில்லை, மாறாக மக்கள்நல நடவடிக்கைகளுக்கு, குறிப்பாக பெருந்தொற்று நோய்தடுப்பு நடவடிக்கைகளுக்கு செலவிடுகிறோம். வருவாய் இழப்பையும், வரி வசூலில் உள்ள கசிவுகளையும் சீர்செய்வதே என் தற்போதைய பணி.

இதற்கான செலவினம் ரூ. 20,000 கோடியைத் தாண்டியிருக்காது, அதில் பெரும்பங்கு ஒரு முறை கோவிட்-19 நிவாரணமாக ரூ.4,000த்தை 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கியதில் செலவிடப்பட்டது, அதுதவிர மருத்துவ உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

நிதி மற்றும் கையிருப்புநிலைக் குறிப்பு சரியாக நிர்வக்கிக்கப்படும் பட்சத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய தொற்றுநோயினால் ஏற்பட்ட இந்த ரூ.20,000 கோடி செலவினம் காரணமாக நீண்டகால எதிர்மறை விளைவுகளை நாம் எதிர்கொள்வோம் என்று அரசு நினைக்கவில்லை.

சுமார் ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது சுமார் 1% ஆகும். பல நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் மேலாக தொற்றுநோயின் விளைவுகளை சமாளிக்க செலவழித்துள்ளன.