தமிழகத்தில் குரங்கம்மை கண்டறியப்படவில்லை,பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழகத்தில் குரங்கம்மை கண்டறியப்படவில்லை,பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழகத்தில் குரங்கம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை திருவள்ளுவர் தெருவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளதாக கூறினார்.

கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் மருத்துவனை கட்டிடத் தரம் குறித்து ஆராயப்பட்டு அதன் அடிப்படையில் கான்ட்ராக்டர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.