முதலமைச்சரை சந்திக்க 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

முதலமைச்சரை சந்திக்க 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் போராட்டம்!

இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர்.

அப்போது தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சந்திரசேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மானிய கோரிக்கையில் முதலமைச்சர் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை அறிவித்தது வரவேற்கத்தக்கது. ஆனால் மகளிர் சுய உதவி குழு மூலம் சிற்றுண்டி வழங்கப்படாமல் சத்துணவு ஊழியர்கள் மூலம் சிற்றுண்டி வழங்கினால், தரமானதாக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் என நம்பிக்கையான கோரிக்கையை முன் வைக்கிறோம்.

மேலும், மதியம் சமைப்பதற்கு ஒரு நபரையும், காலை சிற்றுண்டிக்கு மூன்று நபர்களையும் அரசாங்கம் நியமித்திருப்பது சமூக நீதியை சீர்குலைக்கிறது. அதேபோல் 40,000 காலிப் பணியிடங்களை நிரப்பி விட்டால் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளவர்களும், கணவர்களால் கைவிடப்பட்ட கைம்பெண்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். தரமான கட்டமைப்புகள் எங்களிடம் உள்ளதால் காலை, மாலை உணவை சத்துணவு ஊழியர்களை சமைப்போம் என்றும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

இதையும் படிக்க:கட்சி பொறுப்பிலிருந்து விலகிய பாஜகவின் ஒரே ஒரு கவுன்சிலர். காரணம் என்ன?