நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள், அந்தந்த பள்ளியிலேயே விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அந்தந்த  பள்ளிகளில் விண்ணப்பிக்க வேண்டும்: பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் நாளை காலை 11 மணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதன் பிறகு நீட் தேர்வுக்கு அரசுப்பள்ளி மாணவர்கள் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள், அவரவர் பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ள பள்ளி கல்வித்துறை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களை ஒன்றிணைத்து, பள்ளிகள் வாயிலாக பிழையின்றி விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல இந்தாண்டும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.