' என் குப்பை என் பொறுப்பு ' பொள்ளாச்சியில் விளம்பர போஸ்டர்கள், சினிமா பிளக்ஸ் அகற்றம்..!

பொள்ளாச்சி நகராட்சியில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், சினிமா பிளக்ஸ் பேனர்கள் ஆகியவற்றை அகற்றி நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

' என் குப்பை என் பொறுப்பு ' பொள்ளாச்சியில் விளம்பர போஸ்டர்கள், சினிமா பிளக்ஸ் அகற்றம்..!

பொள்ளாச்சி நகராட்சியில் ஒட்டப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், சினிமா பிளக்ஸ் பேனர்கள் ஆகியவற்றை அகற்றி நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 

என் குப்பை என் பொறுப்பு :

தமிழகத்தில் சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் குப்பை இல்லாத மாநிலமாக மாற்ற, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் :

பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் குப்பைகள் இல்லாத நகராட்சியாக மாற்ற வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி  மாணவர்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

விளம்பர போஸ்டர்கள் அகற்றம் :

அந்த வகையில், இன்று பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சேர்ந்து நகர பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த சினிமா, அரசியல் கட்சி, தனியார் விளம்பர போஸ்டர்கள், மற்றும் பிளாஸ்டிக் பேனர்களை அதிரடியாக அகற்றினர்.

போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது அபராதம் :

பொள்ளாச்சி நகராட்சியை குப்பை இல்லாத நகராட்சியாக மாற்ற பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் இன்ற அகற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து,  பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் ஓட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி தலைவர்  சியாமளா நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.