சுகாதார சீர்கேட்டால் பரவி வரும் மர்ம காய்ச்சல்... வரத்து கால்வாயை தூர்வார வேண்டும் மக்கள் கோரிக்கை...

சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை 27வது வார்டு பகுதியில் சுகாதார சீர்கேட்டால் மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளர்.

சுகாதார சீர்கேட்டால் பரவி வரும் மர்ம காய்ச்சல்... வரத்து கால்வாயை தூர்வார வேண்டும் மக்கள் கோரிக்கை...

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை 27-வது வார்டு பகுதியில் சுமார் 100 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த குடியிருப்பையொட்டி கற்குடி கண்மாய் வரத்துக் கால்வாய் செல்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் இந்த வரத்துக் கால்வாயில் மழை பெய்து தண்ணீர் செல்லாமல் தேங்கி உள்ளது.இந்த கற்குடி கண்மாய் வரத்துக் கால்வாய் கடந்த 10 ஆண்டுககு மேலாக  தூர்வாரப்படாததால் சீமை கருவேல மரம்,புல் உள்ளிட்டவை  வளர்ந்துள்ளதால் மழை நீர் செல்லாமல் தேங்கியுள்ளது,அதேபோல் இந்த வரத்து கால்வாயில் சாக்கடை கலந்து அடைப்புகள் ஏற்படுவதால் குடியிருப்பு பகுதியில் பாம்பு,பூரான்,விஷப் பூச்சி மற்றும் விஷ வண்டுகள் குடியிருப்பு பகுதியில் செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களாக பெய்துவரும் மழையால் கழிவு நீருடன் மழை நீர் சேர்ந்து வீடுகளுக்கு முன் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் வீடுகளுக்கு முன் தேங்கி நிற்கும் நீரில் கொசுக்கள் உருவாகி அதன் மூலம் மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேவகோட்டை நகர் பகுதியில் மர்ம காய்ச்சல் பரவி வரும் நிலையில் 40க்கும் மேற்பட்டோரில் 30 நபர்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்,

மேலும் கடந்த  சில தினங்களுக்கு முன் பாம்பு கடித்து ஒரு பெண்மணிக்கு பாதிப்புக்குள்ளானர். தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர்வாரும் என்னும் திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வர் சிவகங்கை மாவட்டத்தில் இதுபோன்ற நீர்வரத்து நிலைகளை தூர்வாரப்படாமல் ,பராமரிப்பு இல்லாததால் பொதுமக்கள் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றார். இந்தப் பகுதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுகாதார சீர்கேடுகளை அகற்றியும், நீர்வரத்து கால்வாயை தூர் வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.