பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா..! என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை..! காரணம் என்ன?

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா..!  என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை..! காரணம் என்ன?

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி  திரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை.

திடீர் சோதனை:

தமிழ்நாடு மற்றும் கேரளா என 60க்கும் மேற்பட்ட இடங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புகளுக்கு தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைமை அலுவலகம், அதே போல மதுரை, தேனி, திண்டுக்கல், ராம நாதபுரம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி:

பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு நிதி திரட்டி வருவதாகவும், பயிற்சி முகாம் நடத்தி மூளைச்சலவை செய்து பயங்கரவாத செயலுக்கு உட்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிக்க: முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து போஸ்டர்.. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பி.ஏ கைது..!

அதிகாரிகள் கைது:

சமீபத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இதில் தொடர்புடைய 4 பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக கேரளா மற்றும் தமிழ்நாடில் சோதனை நடத்துவதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

யாசர் அராபாத் கைது:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மதுரை மண்டல செயலாளர் யாசர் அராபாத்தை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்து, இந்த கைது நடவடிக்கை முற்றிலும் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை  என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பை சார்ந்தவர்கள் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் குவிப்பு:

இந்த சோதனையில் இதுவரை 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனையின் முடிவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெறுவதால் பாதுகாப்பிற்காக சி.ஆர்.பி.எப் வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.