என்எல்சி நிறுவனம் தனியார் மையமாக்கப்படாது - ஜி.கே.மணி பேட்டி

என்எல்சி நிறுவனம் தனியார் மையமாக்கப்படாது  - ஜி.கே.மணி பேட்டி

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில்  ஜி.கே. மணி பத்திரிகையாளர்களை சந்திக்கையில் தொடர்ந்து 16 ஆண்டு காலமாக வேளாண்மைக்கான தனிநிழல் நிதி அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது

அரசு தனி பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும்

வேளாண்மைக்கான அரசு தனி பட்ஜெட்டை அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்ததின் பெயரில் தற்போது அரசு பொறுப்பேற்றவுடன் வேளாண்மைக்க என தனி பட்ஜெட்டை அறிவித்தது அதன்பேரில் மூன்றாவது முறையாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வேளாண் பட்ஜெட்2023: மல்லிகை இயக்கத்துடன் அறிவிக்கப்பட்ட பல முக்கிய இயக்கங்கள்

மருத்துவர் அய்யாவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி

தமிழக அரசு சார்பில் வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்வது பாட்டாளி மக்கள் கட்சிக்கும் மருத்துவர் அய்யாவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி .வேளாண் துறைக்கு 39 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது வரவேற்கத்தக்கது அதற்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்

முன்பு போல் இல்லாமல் அனைத்து பயிர்களின் உற்பத்தி விளைச்சல் அறுவடை விற்பனை என அனைத்தும் பட்ஜெட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது . வேளாண் பல்கலைக்கழகம் உலக தரத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் அதற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது , அரசு அறிவிக்கும் திட்டங்கள் விளிம்பு நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கும் சென்றடைய வேண்டும்

உழவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் 

அரசு அறிவிப்புகளை அறிவித்ததோடு நின்றுவிடாமல் உழவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்து திட்டங்களை நடைமுறை படுத்த வேண்டும். சமீபத்தில் 2023 2024 ஆம் ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட வேளாண் நிழல் நிதி அறிக்கையில் அறிவித்துள்ள பல்வேறு அம்சங்கள் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | வேளாண் பட்ஜெட்2023: விவசாயிகளுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்படுமா?

என்எல்சி நிறுவனம் தனியார் மையமாக்கப்படாது

என்எல்சி நிறுவனம் சமீபத்தில் 299 பேரை பணியமர்த்தியுள்ளது அதில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை தொடர்ந்து தமிழர்களை நசுக்கி வருகிறது என்எல்சி நிறுவனம்
இரண்டாம் கட்ட மூன்றாம் கட்டம் என 45 ஆயிரம்  ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த துடிக்கிறது இதனை பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என்எல்சி நிறுவனம் அதன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். என்எல்சி நிறுவனம் வெளிப்படை தன்மையுடன் என்றைக்கும் என்எல்சி நிறுவனம் தனியார் மையமாக்கப்படாது என்ற  அறிவிப்பை வெளியிட வேண்டும்