திருப்பத்தூரில் புதிய உதயம்.. மலைவாழ் கிராம மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை

திருப்பத்தூரில், மலைவாழ் கிராம மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவையை  மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூரில் புதிய உதயம்.. மலைவாழ் கிராம மக்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை

மலைவாழ் மக்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இதில் தமிழகம் முழுவதும், 188 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் கிராமமான புதூர் நாடு, நாக்கினேரி, மின்னூர், ஆகிய பகுதிகளுக்கு இந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன் படுத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்தார்.  அத்துடன் விபத்தில் உயிரிழந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மதன் குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.