இ - பதிவு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை ..... தன்னார்வலர்கள் மகிழ்ச்சி

மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள்/தன்னார்வலர்களுக்கு இ-பதிவு செய்துகொள்வதற்கான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இ - பதிவு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை ..... தன்னார்வலர்கள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 16ம் தேதி முதல் தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது.

கடந்த ஆண்டு கொரோனா அலையின்போது, தமிழக அரசு சார்பில் இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வெளியே செல்வதற்கான காரணம் அடங்கிய விண்ணப்பம் இணையத்தில் பதிவு செய்யும்போது, இ-பதிவு உடனடியாக கிடைக்கிறது.

அதே நேரத்தில் இ-பாஸ் முறையில் பதிவு செய்து உறுதி செய்த பிறகே வெளியே செல்வதற்கு அனுமதி கிடைத்தது.

இதனால் வெளியே செல்வதற்கு அவசியம் இருப்பவர்கள் காரணங்களை குறிப்பிட்டு இணையம் வழியாக இ-பதிவு செய்தனர்.

 தற்போது நடைமுறையில் உள்ள இ- பதிவு முறையில் தனிநபர் என்கிற பிரிவில் பயணத்திற்கான காரணமாக இறப்பு, திருமணம், முதியோர் பராமரிப்பு மற்றும் மருத்துவ அவசரம் ஆகியவை உள்ளன.

இந்த நான்கு காரணங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்து வந்த நிலையில், தற்போது இந்த பிரிவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் பராமரிப்பாளர்கள்/தன்னார்வலர்களுக்கு இ-பதிவு செய்துகொள்வதற்கான வசதி
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னார்வளர்களுக்கு இ பதிவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் இனி தடையின்றி உதவிகளை வழங்க முடியும் என தன்னார்வலர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.