ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய திட்டங்கள்- தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!  

இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மருத்துவமனையில் ஒன்றான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். 

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் புதிய திட்டங்கள்- தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!   

குறிப்பாக 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த புராதனமான பெருக்கு மரம் குறித்த கல்வெட்டை திறந்து வைக்கிறார். ஆப்பிரிக்க நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட நடப்பட்ட இந்த பெருக்க மரம் இந்தியாவிலேயே 6 இடங்களில் தான் உள்ளது. பெருக்கமரத்தின் தொன்மை  குறித்து  மக்கள் அறியும் வகையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதற்கான கல்வெட்டை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

தொடர்ந்து மக்களுக்கான திட்டமாக அமைந்த மக்களை தேடி மருத்துவர் திட்டத்திற்கான மையத்தையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். இந்த மக்களை தேடி மருத்துவம்  இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்ட ஓர் அரிய திட்டம் இத்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் இதுவரையில் பயன்பெற்று வருகிறார்கள்.

குறிப்பாக மார்பக புற்று நோய், நீரிழிவு நோய், சர்க்கரை நோய் போன்ற பல நோய்களில் அவதிப்படும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே வந்து தங்களுக்கான மருந்துகளையும் மருத்துவ உதவிகளையும் பெறும் வகையில் தமிழக அரசால் உருவாக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவத்தை நகர்ப்புறங்களில் விரிவுபடுத்தும் நோக்கத்தோடு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மக்களை தேடி மருத்துவர் திட்டத்திற்கான மையத்தையும் தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கான மையத்தை காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். உலக காது கேளாதோர் வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில்  சிறுவர் முதல் பெரியவர் வரை சுமார் 10 நபர்களுக்கு காது கேட்கும் உபகரணங்களையும்  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வழங்குகிறார்.