நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் : ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு !!

இட ஒதுக்கீடு, தேர்தல் விதிகள், மன்ற விதிகள் தொடர்பாக புதிய விதிகளை அமைக்க குழு நியமிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் : ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு !!

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை கொண்டு வர குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தமிழ்நாடு அரசின் அறிவிப்பில், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, தேர்தல் விதிகள், மன்ற விதிகள் தொடர்பாக புதிய விதிகளை அமைக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டட விதிகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் விதிகள், சுகாதார விதிகள், திடக் கழிவு மேலாண்மை விதிகள் ஆகிவயற்றை உருவாக்கவும் குழுக்கள் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பல்வேறு நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக  நகராட்சி நிர்வாக ஆணையரகம் தெரிவித்துள்ள நிலையில், இந்த குழுக்கள் வரும் ஜூன் 10ம் தேதிக்குள் தங்களின் அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.