இனி நோ டென்ஷன்.. விவசாயிகள் பிரச்சனை தீர்வுக்கு சிறப்பு குழு.. பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து தீர்வுகான சிறப்புகுழு அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இனி நோ டென்ஷன்.. விவசாயிகள் பிரச்சனை தீர்வுக்கு சிறப்பு குழு.. பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,

காலநிலை மாற்றத்தின் தாக்கம் தமிழகத்தில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்கள் காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படும் வாய்புள்ளதால் அங்கு மாற்று பயிர் சாகுபடிக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

தமிழகத்தில் உரம்  தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்தார்.  

குறுவை சாகுபடி திட்டத்தால்  46 ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் என்றும் கூறினார்.

கிராம பஞ்சாயத்துகளில் 300 கோடி ரூபாய் மதிப்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து தீர்வு காண தலைமைச்செயலாளர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

இயற்கை வேளாண்மையில் ஆர்வமுள்ள விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனவும் தெரிவித்தார்.

நஞ்சற்ற நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்திட 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.