தமிழகத்தில் உள்ள 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை…

தமிழகத்தில் உள்ள 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 72 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை…

தமிழகத்தில் நடப்பாண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர ஒரு லட்சத்து74ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மேலும் சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 17ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

அதைத்தொடர்ந்து, துணை கலந்தாய்வு அக்டோபர் 19ம் தேதியும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 24ம் தேதியும் நடைபெற உள்ளது. அக்டோபர் 25ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவடைய உள்ளது. இதுவரை நடைபெற்ற முதற்கட்ட கலந்தாய்வு மற்றும் 2ம் கட்ட கலந்தாய்வு முடிவில் மொத்தமாக 31ஆயிரத்து 662 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறப்புப்பிரிவினருக்கு என 6,000க்கும் அதிகமான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது.

விரைவில் 3ம் கட்ட கலந்தாய்வும், 4ம் கட்ட கலந்தாய்வும் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தகவல் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு மாணாக்கர்களிடையே பொறியியல் படிப்புக்கு ஆர்வம் இல்லை என்பது தற்போது நடைபெற்று வரும் கலந்தாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

 தமிழகத்தில் உள்ள 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவலுடன், 131 கல்லூரிகளில் 1 சதவீதத்திற்கும் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது. பொறியியல் படிப்பு மீதான மாணவர் சேர்க்கை குறைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.