முக்கிய அறிவிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு...!

முக்கிய அறிவிப்பு: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு...!

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு, வரும் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு:

2022ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு, கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. இதற்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில், தாள் ஒன்றுக்கான தேர்வுகள் மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் நடத்த உத்தேசிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: கழுதை தேய்ந்த கட்டெறும்பாக... பாரத் ஜோடோ யாத்ராவை கிண்டலாக விமர்சித்த அண்ணாமலை..!

தள்ளி வைக்கப்பட்ட தேர்வு:

இதனிடையே, நிர்வாக காரணங்களினால், தாள் ஒன்றுக்கான தேர்வு, செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக கடந்த மாதம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நிர்வாகக் காரணங்களுக்காக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. 

அக்டோபர் மாதத்தில் தேர்வு:

இந்த நிலையில், தற்போது தேர்வுகள் நடத்தப்படும் தேதிகள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1க்கான தேர்வு, அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை, அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகியவை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.