செவிலியர்கள் போராட்டம்- கமலஹாசன் நேரில் சந்திந்து ஆதரவு

சென்னை தேனாம்மேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்தார்.

கொரோனா பணிக்காக மருத்துவ பணிநியமன ஆணையம் மூலமாக மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் செவிலியர்கள் தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே  அவர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் கொரோனா காலத்தில் செவிலியர்கள் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் பலர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதனால் இந்த நேரத்தில் செவிலியர்களின் பணி நமக்குத் தேவை என கூறிய கமல், செவிலியர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது அரசின் கடமை என வலியுறுத்தினார்.