’நமது அம்மா’ என்ற இதழில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கம்...!
நமது அம்மா என்ற அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் அக்கட்சிக்குள் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் இரு துருவங்களாக தொண்டர்கள் பிரிந்து நிற்கின்றனர்.
பொதுக்குழு கூட்டம் நடந்த அன்றே டெல்லி புறப்பட்டுச் சென்ற ஓபிஎஸ் பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே தமிழகம் திரும்பினார். தொடர்ந்து அவரது பெயரையும், படத்தையும் அழிப்பது என இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா இதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓபிஎஸ் பெயர் நீக்கப்பட்டுள்ளது, அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நமது எம்ஜிஆர் என்ற பெயரில் வெளிவந்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஜெயலலிதா மறைவுக்குப்பின் நமது அம்மா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.