அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை  

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் 2வது நாளாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

அ.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆலோசனை   

உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் 2வது நாளாக ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், உள்ளாட்சித் தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் பணிக்குழு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.