அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார் ஓ.பி.எஸ்!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார். 

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை புறக்கணித்தார் ஓ.பி.எஸ்!

அதிமுக பொதுகுழு கூட்டம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரங்கட்டும் விதமாக ஒற்றை தலைமை விவகாரத்தை முன்வைத்து நிறைவேற்றப்பட இருந்த அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஒற்றை தலைமை தீர்மானத்துடன் சேர்த்து மற்ற அனைத்து தீர்மானங்களும் அடுத்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

பொதுக்குழு கூட்ட நிகழ்வுகளால் கடும் அதிருப்தியடைந்த ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார். அவரோடு அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வெளியேறினர்.  

அப்போது கூட்டத்தினர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது தண்ணீர் பாட்டிலை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஓ. பன்னீர்செல்வத்தின் வாகனம் மீது தொண்டர்கள் காகிதங்களையும் வீசி ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

முன்னதாக இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் புதிய தீர்மானங்களை நிறைவேற்ற கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவை ஓ.பி.எஸ் தொண்டர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடினர் என்பது குறிப்பிடதக்கது.