அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒ.பி.எஸ்-ஈ.பி.எஸ் மனுதாக்கல்...

அதிமுகவின் உள்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு, ஒ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு ஒ.பி.எஸ்-ஈ.பி.எஸ் மனுதாக்கல்...

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வருகிற 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் நடத்துபவர்களாக பொன்னயன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முதலே வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரு பதவிகளுக்கும் நேற்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் இன்று மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.