ஓபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்...மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை!

ஓபிஎஸ்சின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம்...மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவதற்கு தடை கோரிய ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு  மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என்றும் தீர்ப்பளித்தது. தீர்ப்பின்படி, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிக்க : கர்நாடகா: பாஜகவின் முதல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு...முதலமைச்சர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் தொகுதி என்ன?

இதனை எதிா்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 20-ம் தேதி நடைபெற இருந்தது.

இந்நிலையில் மேல்முறையீட்டு மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை ஓபிஎஸ் நாடியதால், அதனை ஏற்று அவரது மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.