ஓபிஎஸ்யிடம் கட்சியும் இல்லை;கட்சியிலும் இல்லை;எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்?

ஓபிஎஸ்யிடம் கட்சியும் இல்லை;கட்சியிலும் இல்லை;எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்?

"ஓபிஎஸ்யிடம் கட்சியும் இல்லை அவர் கட்சியிலும் இல்லை. ஓபிஎஸ் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்? என செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை காமராஜர் சாலையில் உள்ள உயர் கல்வித் மன்றம் வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 17ஆம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். 

அதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்தார்.  அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், சட்டப்பேரவையில் ஓபிஎஸ் தரப்புக்கு இடம் ஒதுக்கும் விவகாரத்தில் சபாநாயகர் சட்ட விதிப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். ”ஓபிஎஸ் இடம் கட்சியும் இல்லை: அவர் கட்சியிலும் இல்லை”. ஓபிஎஸ் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்? என்று கேள்வி எழுப்பிய அவர், அவர்களுக்கு வேறு எங்காவது இடம் ஒதுக்கட்டும் என்று கூறினார்.

இதையும் படிக்க: ‘ஹிஜாப்’ வழக்கும்... கடந்து வந்த பாதையும்...

தொடர்ந்து, திமுகவை வீழ்த்துவதற்காக கூட டிடிவி தினகரனை அதிமுகவில் இணைத்துக்கொள்ள முடியாது என்று கூறிய அவர்,  கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், நாங்கள் இணையும் அளவுக்கு டிடிவி, சசிகலா ஒன்றும் பெரிய சக்தி இல்லை; டிடிவி தினகரன் வேண்டுமென்றால் சசிகலா மற்றும் ஓபிஎஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும் என்று கூறினார்.

இதனைத்தொடர்ந்து, அதிமுக மற்றும் தமிழக மக்களால் புறக்கணிப்பட்ட சக்தி தான் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன். அதனால் அவர்களுடன் இணைய வாய்ப்பே இல்லை என்று கூறிய அவர் சட்டசபையில் அதிமுக உறுப்பினர்களுடன் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏகளுக்கு இடம் கொடுக்க கூடாது என்றும், சபாநாயகர் விதிப்படி நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.