எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு...!

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ. பன்னீர்செல்வம் மனு...!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஒற்றை தலைமை குறித்த தனித்தீமானத்தை கொண்டு வர எடப்பாடி பழனிச்சாமி தரப்பு திட்டமிட்டிருந்த நிலையில் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ள 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்களை நிறைவேற்ற நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போனதை தொடர்ந்து எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் ஜுலை 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும் என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று டெல்லி சென்றுள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இன்றி பொதுக்குழு கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் விதிகளுக்கு எதிராக ஒற்றை தலைமையை ஏற்படுத்த எடப்பாடி பழனிச்சாமி முயற்சிப்பதாகவும் தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் புகார் அளித்துள்ளார்.