"விவசாயிகளிடம் மூட்டைக்கு 60, 70 ரூபாய் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை......" - அன்புமணி ராமதாஸ்.

"விவசாயிகளிடம் மூட்டைக்கு 60, 70 ரூபாய் லஞ்சம் வாங்கும்  அதிகாரிகளை......" - அன்புமணி ராமதாஸ்.

செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரி, படூர், கேளம்பாக்கம், வெளிச்சை, மாம்பாக்கம், பணங்காட்டுபாக்கம் ஆகிய பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கழக கொடி ஏற்றி கல்வெட்டுகளை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். 

பின்னர் மாம்பாக்கம் பகுதியில் மக்கள் மத்தியில் பேசிய அன்புமணி ராமதாஸ்:- 

இளைஞர்கள், முதியவர்கள், மாணவர்கள், வியாபாரிகள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், நெசவாளர்கள் இப்படி ஏதாவது துறையை சேர்ந்தவர்கள் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று சொல்ல முடிகிறதா.  என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசுகையில், ஒரு பகுதியிலோ அல்லது மாநிலத்திலோ  யாராவது சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்களை மாற்ற வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் இருப்பார்கள் ன்றும், ஆனால் தமிழகத்தில் கடந்த 50, 55 ஆண்டுகளாக மக்கள் பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 55 ஆண்டுகளாக 72 லட்சம் பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாகவும், தற்போதய சூழலில், ஒரு கோடியே 30 லட்சம் பேர் தமிழ்நாட்டில் பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் எனவும், அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது எனவும் கேள்வி  எழுப்பினார். "நான் திமுக அரசை மட்டும் சொல்லவில்லை கடந்த 55 ஆண்டுகளாக ஆண்ட அனைத்து அரசுகளும் தான் காரணம்",  என்று குற்றம்சாட்டினார். 

இதையும் படிக்க     }  கள்ளச்சாராயம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக உயர்வு..!

மேலும், இரவு பகலாக கஷ்டப்பட்டு விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் மூட்டைக்கு 60, 70 ரூபாய் லஞ்சம் வாங்கும் நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகளை செருப்பால் அடிக்க வேண்டும் என அன்புமணி ஆவேசத்துடன் பேசினார். 50, 60, 70 என லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மனசாட்சி இல்லாத பேய்கள் என்று பேசினார். 

அதனையடுத்து, "பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் ஒரே ஒருமுறை மட்டும் வாய்ப்பளியுங்கள்; உங்கள் தலையெழுத்து மாறலாம்; தரமான கல்வி, தரமான மருத்துவம், ஒரு ரூபாய் லஞ்சம் இல்லாமல் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ",  என கோரிக்கை விடுத்தார். 

இதையும் படிக்க     } "அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை ஊக்குவிக்கப்பட்டது" அமைச்சர் பொன்முடி!