ஓ இதுதான் வானம் கூரையை பிச்சுட்டு குடுக்கிறதோ..! அரசு பேருந்தினுள் மழை நீர்...! குடை பிடித்தவாறே பயணிக்கும் பயணிகள்....!

ஓ இதுதான் வானம் கூரையை பிச்சுட்டு குடுக்கிறதோ..!  அரசு பேருந்தினுள்  மழை நீர்...!  குடை பிடித்தவாறே பயணிக்கும் பயணிகள்....!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழையானது பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாலை நேரங்களில் இடி,மின்னலுடன் கனமழையானது பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலையில் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கனமழையானது வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் வத்திராயிருப்பில் இருந்து பேரையூர் செல்லும் அரசு பஸ்ஸில் மழை நீர் ஒழுகியதால் அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் ஒரு சில பயணிகள்  குடையை பிடித்த வாரே தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.மேலும் பஸ்ஸில் உள்ள சீட்டுகளில் மழைநீர் தேங்கி நின்றதால் பயணிகள் உட்கார இடம் இன்றி சுமார் 30 கிலோமீட்டர் தூரம் நீர்கொண்டே பயணித்தனர்.

இதையும் படிக்க     ]  திருவண்ணாமலையில் ஒரே நாளில் நிகழ்த்த சோகம்...! இடி மின்னல் தாக்கி இருவர் பலி....!

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுபோன்று மழைக்காலங்களில் மழைநீர் பஸ்ஸிற்குள் ஒழுகுவதை தடுக்கும் பொருட்டு பழைய பஸ்களின் மேற்குறைகளை சரி செய்து பயணிகள் இதுபோன்று சிரமத்திற்கு ஆளாகாதவாறு பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பஸ்ஸில் பயணித்த பயணிகள் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இதையும் படிக்க     ]  கோடை மழையிலும் படகு சவாரி..! கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள்..!