நீலகிரி: கனமழையால் கேரட் தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு..!

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல்..!

நீலகிரி: கனமழையால் கேரட் தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு..!

நீலகிரியில் தொடர்மழை காரணமாக  நான்கு ஏக்கர் கேரட் பயிரிடப்பட்ட விவசாய நிலத்தில் மண்சரிவு ஏற்பட்டது. 

கேரட் தோட்டம் நாசம்: நீலகிரி மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உதகை அருகே உள்ள லாரன்ஸ் என்ற பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட கேரட் தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால், சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான கேரட் தாழ்வான பகுதிக்கு அடித்து செல்லப்பட்டது. மேலும், விவசாய உபகரணங்களான நீர் உறிஞ்சும் மோட்டார், நீர் தெளிப்பான், விவசாயம் சார்ந்த மற்ற பொருட்களுக்கும் மண்சரிவில் சிக்கின. இதனால், விவசாயிகள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.