”கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர் தேவர்” - முதலமைச்சர் ட்வீட்

”கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர் தேவர்” - முதலமைச்சர் ட்வீட்

தேவர் ஜெயந்தியை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு...!

115 வது தேவர் குருபூஜை:

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நாளை  115-வது தேவர் குரு பூஜை நடைபெறவுள்ளது. இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு  அவரது நினைவிடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நேற்று மதுரை செல்வார் என்று தகவல்கள் வெளியானது. 

பசும்பொன் பயணம் ரத்து:

இதனிடையே, உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீண்டதூரம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்ற மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மதுரை பயணத்தை ரத்து செய்தார். தேவர் குருபூஜையில் முதலமைச்சருக்கு பதிலாக, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டது.

இதையும் படிக்க: பசும்பொன் பயணம் ரத்து...முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னாச்சு?

மதுரை சென்று மரியாதை செலுத்திய மூத்த அமைச்சர்கள்:

அதன்படி, இன்று மதுரை சென்ற மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முதலமைச்சர் ட்வீட்:

இந்நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அதில், ”கொடுங்கோல் சட்டத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டியவர்! ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் நேதாஜியின் கரத்தை வலுப்படுத்தியவர்! "தென்னகத்து போஸ்" ஐயா பசும்பொன் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் தீரத்தையும், தியாகத்தையும், நற்பணிகளையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்! இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.