யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.. இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை!!

யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.. இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை!!

நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்கி இருளர் பழங்குடியினத்தைச்சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.

தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்த காட்டு யானைக் கூட்டம் தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளன. இந்தநிலையில் கொப்பரை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் பணிக்குச் சென்று விட்டு தேயிலைத் தோட்டம் வழியாக வீடு திரும்பும் போது  காட்டு யானை தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இரவு முழுவதும் வீட்டிற்கு வராத நிலையில்  மகன் மற்றும் ஊர் பொதுமக்கள் தேடிய போது பெருமாள் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இரவு நேரங்களில் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துள்ளது.