ரப்பர் ஆலையில் எந்திரம் வெடித்ததில் ஒருவர் பலி - 5 பேர் கவலைக்கிடம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ரப்பர் தொழிற்சாலையில் உள்ள எந்திரம் வெடித்ததில் வட மாநில தொழிலாளி உயிரிழந்த நிலையில், 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தக்கலை அருகே கொல்லன் விளை பகுதியில் கேரளாவை சேர்ந்த குரியன் ஆபிரகாம் என்பவருக்கு  சொந்தமான தனியார் ரப்பர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.  இன்று அதிகாலை இந்த ஆலையில் 10 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஒரு இயந்திரம் வெடித்து சிதறியதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த  பாலி மகத் என்ற 32 வயதான தொழிலாளி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் 5 தொழிலாளர்களுக்கு உடலில் பெரும் சேதம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நள்ளிரவில் தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்து வட இந்திய தொழிலாளி பலியான சம்பவம் தக்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.