கொரோனா சான்றிதழ் முடிவுகளை வைத்துள்ளவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி...

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை முடிவுகளை வைத்துள்ளவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா சான்றிதழ் முடிவுகளை வைத்துள்ளவர்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதி...

கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு  நாட்டிலேயே அதிக எண்ணிக்கையான 20 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இதன் காரணமாக மத்திய குழு கேரளாவில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கேரளாவில் இருந்து வரும் பயணிகளிடம் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளையில், ஆர்.டி.பி.சி. ஆர் சான்றிதழ் வைத்துள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

கர்நாடகா மாநிலத்திலும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருவதால், தமிழக கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருந்து தமிழகம் நோக்கி வரும் பயணிகள், மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதேபோல் தமிழக, கேரள, கர்நாடக எல்லைகளை  ஒட்டிய பகுதியான நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் வாகன சோதனை தீவிரபடுத்தப்பட்டு உள்ளது. அங்குள்ள 7 சோதனைச் சாவடிகளில், உரிய கொரோனா பரிசோதனை ஆவணங்கள் இன்றி வரும் வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.