தமிழர்களின் தொன்மை பறைசாற்றும் கீழடி அகழ் வைப்பகம் பொங்கலுக்கு திறப்பு

தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடியில் கட்டப்பட்டு வரும் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் வரும் ஜனவரி 14ம் தேதி பொங்கலன்று திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தமிழர்களின் தொன்மை பறைசாற்றும் கீழடி அகழ் வைப்பகம் பொங்கலுக்கு  திறப்பு

கீழடியில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் 11 கோடியே மூன்று லட்ச ரூபாய் செலவில் ஆறு கட்டிட தொகுதிகளுடன் அருங்காட்சியக கட்டிட பணிகள் கடந்த 2020ல் தொடங்கின. கொரானோ பரவல், தொடர் மழை. மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் மந்த கதியில் நடந்தன. செட்டிநாட்டு கட்டிட கலை பாணியில் கட்டப்பட்ட அருங்காட்சியக கட்டிட பணிகள் முடிவடைந்து பொருட்களை காட்சிப்படுத்த ஏதுவாக மர ஷெல்ப் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் படிக்க | அறிஞர் அண்ணா கூட்டுறவு மூலமாக 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அமைச்சர் உறுதி

இரண்டு கோடி ரூபாய் செலவில் பொருட்களை பார்வையாளர்கள் காண வசதியாக ஒளி பாய்ச்சும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. உலோக பொருட்கள், மண்பாண்ட பாத்திரங்கள், சுடுமண் காதணிகள், அலங்கார பொருட்கள், எலும்பு பொருட்கள், தங்க பொருட்கள், தொழில் சார்ந்த பொருட்கள், திறந்த வெளி திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. செட்டிநாட்டு கட்டிட வடிவமைப்பில் உள்ள இவற்றின் தூண்கள் தேக்கு மரத்தாலும், கூரைகள் தட்டு ஓடுகளாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வெளியில் இருந்து பார்க்க வசதியாக கூரை மேலும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

மத்திய அரசால் மிரட்டப்படுகின்றனரா நீதிபதிகள்...முன்னாள் நீதிபதி கூறியதென்ன

மேலும் படிக்க | 

கட்டிட அறைகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் ஒவ்வொரு அறையிலும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மதிப்பு வாய்ந்த பொருட்களை பாதுகாக்க தீவிபத்து முன்னெச்சரிக்கை ஒலிப்பான் கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் மின் விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்த பின் பொருட்கள் அனைத்தும் வைக்கப்பட்டு பொங்கல் திருநாளன்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றியுள்ள நிலையில் தினசரி பார்வையாளர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அருங்காட்சியகமும் விரைவில் திறக்கப்பட்டால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழக தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட ஐந்து கட்ட (மொத்தம் எட்டு கட்ட அகழாய்வு, மத்திய அரசு மூன்று கட்ட அகழாய்வை நடத்தி முடித்துள்ளது) அகழாய்வில் கிடைத்த பொருட்கள் முதல் கட்டமாக காட்சிப்படுத்தப்பட உள்ளது.