பெரம்பூர்: சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...!

பெரம்பலூர் மாவட்டம் எறையூர் சிப்காட்டில் முதல் தொழிற் பூங்காவை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்.
சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர்:
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை திருச்சி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர், காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வானவில் மன்றம் திட்டத்தை துவக்கி வைத்தார். 25 கோடி ரூபாய் மதிப்பில், 13 ஆயிரத்து 200 அரசுப் பள்ளிகளில் 'வானவில் மன்றம்' திட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவ மாணவியருடன் கலந்துரையாடினார்.
இதையும் படிக்க: ஆளுநர் பதவி காலாவதியான ஒன்று...எம்.பி கனிமொழி அதிரடி!
பல்வேறு திட்டங்கள் திறப்பு:
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எறையூர் சிப்காட் தொழில் பூங்காவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பீனிக்ஸ் கோத்தாரி காலனி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். இதனைடுத்து தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தோடு பீனிக்ஸ் கோத்தாரி காலணி பூங்கா மற்றும் தொழில் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாற்றம் செய்தார்.
இதனையடுத்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகை மேட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகழாய்வில் கண்டறியப்பட்ட பழமையான பொருட்கள் மற்றும் அகழாய்வு மேற்கொண்ட பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்கு நடக்கும் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கொள்கை வகுத்து- முதலீடுகளை ஈர்த்து, புதியதொரு தொழிற்புரட்சியில் நமது அரசு ஈடுபட்டுள்ளது. பெரம்பலூரில் 50000 பேருக்கு, அதிலும் பெரும்பாலும் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ள #SIPCOT திறந்து வைத்து, காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினேன்.
— M.K.Stalin (@mkstalin) November 28, 2022
அனைத்து மாவட்ட வளர்ச்சி, சீரான வளர்ச்சி! pic.twitter.com/KJyxEXFmU2