செல்லூர் ராஜு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு வாய்ப்பு: எச்சரிக்கும் அமைச்சர் பி.டி.ஆர்...

ஜி.எஸ்.டி கவுன்சில்  கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

செல்லூர் ராஜு வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு வாய்ப்பு: எச்சரிக்கும் அமைச்சர் பி.டி.ஆர்...

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி எஸ் டி கூட்டத்திற்கான அழைப்பு தாமதமாக வந்ததாகவும்,கூட்டம் நேரில் நடக்கும் என்ற அறிவிப்பை முன்பே கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும்  இன்றைய ஜிஎஸ்டி கூட்டத்தில்  முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் எதுவும் பேசுவதற்கு  வாய்ப்பு இல்லை என்பதாலும் தொகுதியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க இருந்ததாலும்   கூட்டத்திற்கு செல்லவில்லை என அமைச்சர் பிடிஆர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்தார்.மேலும் மதுரை ஸ்மார் சிட்டி திட்ட முறைகேடு விவகாரத்தில்  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் லஞ்ச ஒழிப்பு  சோதனை நடத்துவதற்கு  வாய்ப்புள்ளதாகவும் பழனிவேல் தியாகராஜன் எச்சரித்தார்.

முன்னதாக பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன், மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டுவதற்கு பிளானிங் கமிஷன் அனுமதியே வாங்கவில்லை என்றும், வடிவேல் காமெடி போல ஒரு பேருந்து நிலையத்தையே தற்போது காணவில்லை என்றும் விமர்சித்தார்.