தென்காசியில் விவசாய நிலத்தில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு..! மனு கொடுக்க திரண் ட மக்கள்...!

தென்காசியில்  விவசாய நிலத்தில் மின் மயானம் அமைக்க  எதிர்ப்பு..!   மனு கொடுக்க திரண் ட மக்கள்...!

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் மின்மயானம் அமைப்பதற்கு பல்வேறு பகுதிகளில் இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பையும் தொடர்ந்து மின்மயானம் அமைக்கும் பணிக்காக தற்போது குலையனேரி கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தெரிவுடைசெய்யப்பட்டு இருக்கிறது. 

அதன்படி,  சுமார் 200 ஏக்கருக்கு மேல் வாழை, தென்னை, கடலை போன்ற பயிர்கள் விளைகின்ற விவசாய நிலப்பகுதியில் மின்மயானம் அமைக்க சுரண்டை நகராட்சியால் டெண்டர் விடப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி நிர்வாகிகள் அதே இடத்தில் மின் மயானம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் விவசாய பணிகளில் ஈடுபட்டு விவசாயிகள், பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம்  மனு கொடுப்பதற்காக திரண்டு வந்தனர்.

அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று கூறி பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், புதிதாக மின்மயான சுடுகாடு அமைக்காமல் ஏற்கனவே சுடுகாடு உள்ள பகுதியிலேயே மின்மயமானம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு உள்ளே அவர்களை அனுமதிக்க மறுத்தனர். 

இதையும் படிக்க      } கொடுக்கப்பட்டுள்ள 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்... உதயநிதி!!

இதையடுத்து,  காவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிக்க      }  அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள்... கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை தொடங்கும் அதிகாரிகள்!!