இபிஎஸ்க்கு ஆதரவு..! ஜெயக்குமார் காரை தாக்கிய ஓபிஸ் ஆதரவாளர்கள்..!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காரை தாக்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆபாச வார்த்தைகளால் வசைபாடினர்.

இபிஎஸ்க்கு ஆதரவு..! ஜெயக்குமார் காரை தாக்கிய ஓபிஸ் ஆதரவாளர்கள்..!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தலைமை குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவுக்கு  ஒற்றைத் தலைமை தேவை என்பதே பெரும்பாலான நிர்வாகிகளின் எண்ணமாக உள்ளதாகத் தெரிவித்தார்.  ஜெயக்குமாரின் இந்தக் கருத்து இபிஎஸ்க்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஓபிஎஸ்சும், இபிஎஸ்சும் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னையில் உள்ள அக்கட்சி தலைமையகத்துக்கு ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போது அவரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள், ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், காரையும் தாக்கினர். இதனால் சிறுது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.