பொது இடங்களில் உள்ள கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற உத்தரவு !!
சென்னையில் உள்ள பொது இடங்களில் உள்ள கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. அதன்படி நாளை முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள பொது இடங்களில் வரையப்பட்டுள்ள கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற அனைத்து வார்டு உதவி மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. உடனடியாக பணிகளை தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை கண்காணிக்க சென்னையில் 45 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.