"போக்குவரத்து கழகங்களில் இனி அவுட் சோர்ஸிங்" அமைச்சர் சிவசங்கர்...!!

"போக்குவரத்து கழகங்களில் இனி அவுட் சோர்ஸிங்" அமைச்சர் சிவசங்கர்...!!

போக்குவரத்து கழகங்களில் ஒட்டுநர் மற்றும் நடத்துனரை வெளியில் இருந்து அமர்த்த இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்துள்ளார். 

அரசு போக்குவரத்து கழக கும்பகோணம்  தலைமை அலுவலகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் குளிர்சாதன வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று திறந்து வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கரன், "பல போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் விடுப்பில் உள்ளதாலும் சுற்றுலா தளங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குவதாலும் அதை சமாளிக்க, அவுட் சோர்சஸ் முறையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளது" என்று கூறினார்.

மேலும் புதிய போக்குவரத்து கழக ஊழியர்களை கடந்த 5 ஆண்டுகளில் பணியில் அமர்த்தவில்லை எனவும் அந்த சூழலை மாற்றியமைக்க தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம்  மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழகம் ஆகியவற்றிற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்காக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, போக்குவரத்து கழகங்களில் அதிகாரிகளுக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடையே ஏற்படும் பிரச்சனை குறித்து கேட்டபோது கோபத்தில் இது போன்று அங்காங்கு நடைபெறுவதாகவும் இது குறித்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அவுட்சோர்ஸிங் எனப்படும் தற்காலிகமாக வெளியில் இருந்து ஆள் எடுக்கும் முறையை பல்வேறு கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில் அமைச்சர் சிவசங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?