பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்கள் இனி திருவள்ளூர் மாவட்டம்..!

தமிழ்நாடு மாவட்டங்கள்:
சுதந்திரத்தின் போது, இந்தியாவில் மெட்ராஸ் பிரசிடென்சி 26 மாவட்டங்களைக் கொண்டிருந்தது. 1 நவம்பர் 1956 அன்று இந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. உருவாக்கப்பட்டபோது இருந்த 13 மாவட்டங்கள் இருந்தன. பின்னர் பல நிர்வாக வசதி, தட்பவெட்ப சூழ்நிலைகள், அனைத்து பிரிவினருக்கும் சம உரிமை வழங்க என திருத்தங்களுக்காக தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் பிரிக்கபட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டனர். தற்போது தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் :
06 ஜூலை1968 தேதி செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. பிறகு 1996 இல் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் என்றும் திருவள்ளூர் மாவட்டம் என்றும் வழங்கப்பட்டது
இதையும் படிக்க: கூட்டணியில் கூட வேண்டாம் என... திருமாவளவன் உருக்கம்..!
செம்பரம்பாக்கம் ஊராட்சி:
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தாலுகா செம்பரம்பாக்கம் ஊராட்சியில் செம்பரம்பாக்கம், பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. செம்பரம்பாக்கம் கிராமம் மட்டும் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தாலுகா வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது
பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய கிராமங்கள் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் தாலுகா வருவாய்த்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் இருந்தது.
இணைந்த கிராமங்கள்:
ஒரே ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் இரண்டு மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டில் வந்ததால் பல்வேறு குழப்பங்கள் ஏற்ப்பட்டதை அடுத்து, பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து அறிவிப்பு வெள்யிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.