முழு கொள்ளளவை எட்டிய பாம்பாறு அணை... கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி...

ஊத்தங்கரை அருகே உள்ள பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.

முழு கொள்ளளவை எட்டிய பாம்பாறு அணை... கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள பாம்பார் அணைக்கு தொடர்ந்து நீர் வாரத்தால் அணை முழு கொள்ளளவை எட்டியது.

பாம்பாறு அணை தண்ணீரை நம்பியே ஊத்தங்கரை மற்றும்  சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் இந்த அணையின் குடிநீர் ஆதாரத்தை நம்பி உள்ளது. அதேபோன்று அணையில் இருந்து திறந்துவிடப்படும் பாசன வசதிக்காக தண்ணீரை நம்பி கொண்டம்பட்டி, மூன்றம்பட்டி, நாயக்கனூர், நடுப்பட்டி, மாரம் பட்டி, மிட்டப்பள்ளி போன்ற ஊராட்சிகளும், தர்மபுரி மாவட்டத்தில் சில பகுதிகளிலும் பாம்பாறு  அணை தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்பொழுது திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் அணைப்பகுதியில் தொடர் மழையால் அணை நிரம்பி அதிலிருந்து ஒரு தண்ணீர் உபரி நீர், அருகிலுள்ள ஜவ்வாது மலையில் பெய்யும் தொடர் மழையினால் அங்கிருந்து அங்குத்தி சுனை நீர் வீழ்ச்சி வழியாக பாம்பார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து 170 கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியது. அனைத்து தொடர்ந்து நீர் வரத்தால்  விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாசன வசதிக்காக தமிழக அரசு உடனடியாக பாம்பாறு அணையின் தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.