அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தல்

அரசுப்பள்ளியை பெருமையின் அடையாளமாக மாற்றிக்காட்ட உழைத்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கம் மாதிரி மேல்நிலைப் பள்ளியில், செயல்வழி கற்றல் முறை திட்டம் மற்றும் மழலையர் வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் விழாவில் உரையாற்றிய அவர்,  அரசுப்பள்ளிகளை மேம்படுத்த தனியாரின் பங்களிப்பு அவசியம் என கூறினார்.  ஒரு சில அரசு பள்ளிகளில்  மட்டுமே மழலையர் வகுப்பு இருப்பதாகவும், மக்கள் தனியார் பள்ளிகளை நாடும் நிலையை மாற்றும் வகையில் இன்று அரசுப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அப்போது அரசுப்பள்ளியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்  முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்துக்கு இதுவரை 60,400 பேர் தன்னார்வலர்களாக செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.