மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பே பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்பே பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை தலைமைச் செயலகத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு எழுதுக இயக்கம் சார்பில் நான்காம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி மாணவர்கள் வரை எழுதிய 100 புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.  அதனை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மூன்று மாநிலங்களில் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகவும், வரும் நாட்களில் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பே பள்ளிகள் திறப்பது குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கப்படும் என கூறினார்.

தொடந்து பேசிய அவர், 12ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத 23 மாணவர்கள் மட்டுமே மறு தேர்விற்காக விண்ணப்பித்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விரைவில் குறைக்கப்படும் எனவும் கூறினார்