30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள்... எந்த நேரமும் இடிந்துவிழும் அபாயத்தில் மக்கள்...

கிருஷ்ணகிரிமாவட்டம் ஊத்தரங்கரை ஒன்றியத்தில் எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடும் நிலையில் அருந்ததியர் வாழும் குடியிருப்புகள் உள்ளன.

30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகள்... எந்த நேரமும் இடிந்துவிழும் அபாயத்தில் மக்கள்...

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரணகுப்பம் ஊராட்சி  வெண்ணாம்பட்டி உள்ளது,கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லை பகுதியாகும். இந்த கிராமத்தைச் சேர்ந்த  அருந்ததியினர் மக்கள் அந்தப் பகுதியில் வசித்து வருகின்றனர்.

அன்றாடம் கூலித் தொழில் வேலைக்கு செல்லும் இந்த  மக்களுக்கு கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்,தமிழக அரசு 23 இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டது. அந்த வீடுகள் தற்பொழுது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காரணம் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரிந்து. எப்ப விழும் என்று தெரியாது.

அன்றாடும் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் உணவில் காரைகள் பெயர்ந்து  விழுவது,   மழை பெய்தால் முழுக்க முழுக்க அந்த வீட்டில் தண்ணீர் வருவது, வீட்டில் தூங்குவதற்கு அச்சப்பட்டு, மக்கள்  இப்படி பல்வேறு துயரங்களுடன்,  இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்த பகுதி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும்அவதிப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

ஏற்கனவே சிங்காரப்பேட்டை ஊராட்சி உட்பட்ட அம்பேத்கர் நகரில் கடந்த சில மாதம் முன்னர் அரசு தொகுப்பு வீட்டில் உடைந்துபோன கம்பியில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சார்ந்த 3 பெண்கள்  உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தையே உலுக்கியது.

இதுபோன்று எந்த உயிர் சேதம் ஏற்படாத வண்ணம் அன்றாடம் உயிரை கையில் பிடித்தவாறு வாழும் இந்த வெண்ணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருந்ததியின மக்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டிக்கொடுத்து இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் இந்த அபாய நிலையில் வாழும் மக்களின் வீடுகளுக்கு நமது செய்தியாளர் வீட்டிற்கு உள்ளே செய்தி சேகரிக்க நுழையும் போது சார் சீக்கிரம் வீடியோ எடுத்துட்டு வெளியே வந்துவிடுங்க.  ஏன்னா எப்ப விழும் என்றே சொல்ல முடியாத என அங்கிருந்த பெண்கள் கூறும் போது
கல் நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.