அதிர்ஷ்டம் சேர்க்கும் அட்சய திருதியை நன்னாளில்... தங்கம் வாங்க கூட்ட கூட்டமாய் திரளும் மக்கள்...!

அட்சய திருதியையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தங்க நகை வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அதிர்ஷ்டம் சேர்க்கும் அட்சய திருதியை நன்னாளில்... தங்கம் வாங்க  கூட்ட கூட்டமாய் திரளும் மக்கள்...!

ஆண்டுதோறும் சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை அட்சய திருதியை எனப்படும். பிரசித்தி பெற்ற அட்சய திருதியை நன்னாளில் தங்க நகை வாங்கினால் வீட்டில் சுபிக்‌ஷம் நிலைக்கும் என்பது ஐதீகம். இதையடுத்து அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம்.

அதன்படி, இன்று அட்சய திருதியையை முன்னிட்டு நகைக் கடைகளில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகவும் சாதாரண முறையில் அட்சய திருதியை கொண்டாடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் தளர்வினால், பொதுமக்கள் நகை வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தங்கம் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியுடன் நகை வாங்கிச் செல்கின்றனர். அதிக அளவில் விற்பனை நிகழ்வதாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.