டேய் புடிங்கடா...லாரியின் டயர் பாதிலேயே கழன்று ஓடியதால்...பீதியடைந்த மக்கள்!!

டேய் புடிங்கடா...லாரியின் டயர் பாதிலேயே கழன்று ஓடியதால்...பீதியடைந்த மக்கள்!!

நெல்லை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போ லாரியின் டயர் திடீரென கழன்று ஓடியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

திருவனந்தபுரத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிஎன்ஜி கேஸ் எடுத்து கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது  நெல்லை புண்ணியவான்புரம் அருகே வந்த போது டெம்போ லாரியின் பின் டயர்கள் கழன்று  நடுரோட்டில் ஓடியது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாலையில் சென்ற லாரியில் இருந்து டயர் கழன்று ஓடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது