பேரறிவாளன் விடுதலை வழக்கு.. மனித உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பேரறிவாளன் விடுதலை வழக்கில், மனித உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் விடுதலை வழக்கு.. மனித உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது- முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளனை 31 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தநிலையில் தீர்ப்பினை வரவேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின், மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை அடிப்படையில் பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்கது என கூறினார்.

தமிழ்நாடு அரசு  மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அதே வேளையில், மாநில உரிமை கம்பீரமாக நிலை நாட்டப்பட்டுள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார். மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிட வேண்டியது இல்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து 6 பேர் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.