கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை..!

கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஒரேவிலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை..!

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை அன்றாடம் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இதனால், பெட்ரோல், டீசல் விலை தினசரி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில் கடந்த இரண்டு மாதங்களாகவே சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் நீடித்து வருகிறது.

அதாவது சென்னையில் கடந்த 72 நாட்களாகவே ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 40 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 43 காசுகளுக்கும் விற்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் 73-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.