வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை 100-ஐ கடந்தது!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை 100-ஐ கடந்தது!

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏற்கனவே பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விறபனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 காசுகளுக்கு விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்தவகையில் சென்னையில் பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் டீசல் ரூ.93.72 விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னை வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் பெட்ரோல் விலை நூறு ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.