மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மருத்துவர்கள் தேவை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள் தேவை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற 51 மருத்துவர்கள் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மகப்பேறு நல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், பொது மருத்துவர் என்று ரூ.90,000 மாத ஊதியத்தில் 11 மாத காலத்துக்கு பணியாற்ற 51 பேர் தேவை எனவும் தகுதி உடையவர்கள் www.chennaicorporation.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 22-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 27-ஆம் தேதி, மாநகராட்சி அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்றும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.