தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு...

தமிழகத்தில் அனைத்து மத வழிபாட்டு தளங்களும்  நாளை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு கோயில்கள் தேவாலயங்கள் சுத்தப்படுத்தப்பட்டன.

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு நாளை வழிபாட்டு தலங்கள் திறப்பு...

கொரோனா வைரஸ் தொற்று வெகுவாக குறைந்ததால்  தமிழகத்தில் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டு தளம் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாகையில் உள்ள நாகூர் தர்காவில் தூய்மை பணிகள் நடைபெற்றது.  தமிழக அரசின் வழிபாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நாளை காலை 4.30 மணிக்கு தர்கா திறக்கப்படும் என்றும், பக்தர்கள் அனைவரும்  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிபு அறிவித்துள்ளார். 

இதேபோல் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் தடுப்புகள் அமைத்து, பக்தர்கள் வழிபாட்டு நடத்துவதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளும் பேராலய நிர்வாகம் சார்பாக செய்யபட்டது.பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் சுத்தம் செய்யும் பணி இன்றும் நடைபெற்றது.  ஊழியர்களைக் கொண்டு பிரகாரங்கள் சுத்தம் செய்யப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று  வரும் நிலையில் நாளை கோவில் திறக்கப்பட உள்ளதால் முனேற்பாடு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூ பகுதியில் உள்ள கோவில்களிலும்  தேவாலயங்களிலும் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக தயார் படுத்தப்பட்டுள்ளது. 
..........................