பேனா சிலை வைப்பது பாராட்டுக்குரியது : ஆனால்... டிடிவி தினகரன் சொன்னது என்ன?

பெரியார் கடவுளுக்கு எதிரி அல்ல, கடவுள் பெயரை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு தான் எதிரியாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன் 

பேனா சிலை வைப்பது பாராட்டுக்குரியது : ஆனால்... டிடிவி தினகரன் சொன்னது என்ன?

தினகரன்

வருகின்ற 15ம் தேதி அமமுக பொது குழு கூட்டம்  நடத்துவது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள  அமமுக  தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,

அமமுக பொதுக்குழு

அமமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது. நான் திருச்சியில் பொதுக்குழு கூட்டம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தேன், ஆனால்  ஜெயலலிதா இருந்த பொழுது ஸ்ரீவாரி மண்டபத்தில் தான் பொதுக்குழு கூட்டம் நடத்துவார் அதன் காரணமாக தான் பொதுக்குழு அங்கு நடத்த முடிவு எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.

மாறி மாறி குறைகூறும் அரசுகள்

ஜிஎஸ்டி வரி விதிப்பு மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று. மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி குறை கூறி கொள்ளாமல் மக்களுக்கு நல்லது செய்ய இருவரும் கூட்டு முயற்சியுடன் பணியாற்ற வேண்டும். மக்களுக்கு பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

பிரதமர் தமிழ்நாட்டிற்காக ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால் அந்த மேடையில் தமிழக அரசு பாராட்டி பேசியது சரி தான் என்றும் தமிழக முதல்வர் அதை சரியாக தான் செய்து இருக்கிறார். அதில் எதுவும் தவறு இல்லை என்று கூறினார்.

ஓடி ஒளிந்த கனல் கண்ணன்

பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று கூறிவிட்டு எதற்கு கடல் கண்ணன் ஓடி ஒளிந்தார். நான் தீவிர கடவுள் பக்தி உள்ளவன். கடவுள் மறுப்பை தவிர  பெரியாரின் மற்ற அனைத்து சமூகநீதி  கொள்கையும் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். பெரியார் கடவுளுக்கு எதிரி அல்ல, கடவுள் பெயரை பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு தான் எதிரியாக இருந்தார் என்று நான் நினைக்கிறேன்  என கூறினார்.

மேலும் பெரியாரின் அனைத்து சமூகநீதி கொள்கைகளையும் நாம் ஏற்றுக் கொண்டு பின்பற்றி வருகிறோம் அவர் இல்லை என்றால் நாடு இந்த அளவுக்கு முன்னேறி இருக்காது பெரியாரைப் பற்றி கனல் கண்ணன் அவ்வாறு பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை பேசிவிட்டு  ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை.

பேனா சிலை

கருணாநிதி ஒரு மிகப்பெரிய தலைவர், உண்மையிலேயே அவருக்கு பேனா வைக்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவில் நிறைய பணம் வைத்திருக்கிறார்கள் கட்சி சார்பில் அதை வைத்தால் அது தவறில்லை. மக்கள் வரி பணத்தில் எடுத்து செய்வது தேவையில்லாதது. திமுக பணத்தில் செய்தால் அதில் நிச்சயம் பாராட்டிற்குரியது என்று கூறினார்.

கட்சியில் ஒரு சமூகத்தினர் மட்டுமே இணைந்து செயல்படுவது சரியாக இருக்காது. கட்சி அனைத்து சமூகத்தினருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்ற அவர், எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் ராஜபக்சே  வாக செயல்படுகிறார் என்று கூறினார்.